குல்மோகர் பூங்கா
இந்தியாவின் தில்லியில் உள்ள சுற்றுப்புற நகரம்குல்மோகர் பூங்கா இந்தியாவின் தெற்கு தில்லியில் உள்ள ஒரு சுற்றுப்புற நகரப் பகுதியாகும். இந்த பூங்கா அவுசு காசு மற்றும் கௌதம் நகர் இடையே அமைந்துள்ளது. சிவப்பு-பூக்கள் கொண்ட குல்மோகர் மரங்கள் அதிகம் இங்கு காணப்படுவதால் குல்மோகர் பூங்கா என்று பெயரிடப்பட்டது. அருகிலுள்ள குடியிருப்பு காலனியும் குல்மோக பூங்கா பத்திரிகையாளர் குட்ட்டியிருப்பு அல்லது சுருக்கமாக குல்மோக பூங்கா என்று அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதி 1970 ஆம் ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. இன்று உயர்மட்ட வணிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சினிமா நட்சத்திரம் அமிதாப் பச்சன் போன்றவர்கள் வசிக்கும் முக்கியப் பகுதியாக வளர்ந்துள்ளது.
Read article